தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. இந்த என்னுடைய முதல் பதிவில் நான் தங்கத்தின் விலை பற்றி தெளிவாக கூற விழைகிறேன். உங்களுக்கு எந்த வகையில் இது பயனுள்ளதாக இருக்கும் என தெரியாது. இருப்பினும் இது எனது முதல் பதிவு என்பதால் சற்று பெரிய மனது பண்ணி ஏதேனும் தவறு இருப்பின் மன்னித்து கொள்ளவும்.
தங்கம்
எனக்கு விபரம் தெரிய தொண்ணுறுகளில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ 2000/-. அனால் இன்று அது பத்து மடங்குக்கும் மேல் விலை உயர்ந்து விட்டது என அனைவரும் கூறுகின்றனர். இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு கிடையாது என்றெய கூற வேண்டும். ஏன் எனில் அன்றய விலைவாசி வேறு இன்றய விலைவாசி வேறு . அன்று வயலில் வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ 12/- அனால் இன்று அதுவும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இது யாவரும் அறிந்த ஒன்றுதான. அந்த காலத்தில் பணத்தை மண்ணில் போடு அல்லது பொன்னில் போடு என்று கூறுவார்கள். அதாவது எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் நாள்ல நமது முதலீடு பல மடங்கு பெறுக வேண்ண்டுமெனில் நாம் நமது பணத்தை இடம் அல்லது தங்கம் வாங்க வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு பவுன் தங்கம் வாங்க எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்று எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். எனவே நாம் ஒவ்வொரு பணத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நம் பணத்தை மிகவும் கவனமாக முதலீடு செய்ய வேண்டுமெனில் நாம் நம் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தால் மிகவும் பயனுள்ளதாகவும். மேலும் அதிகமான வருமானம் உள்ளதாகவும் நமக்கு இருக்கும். இந்த எனது கருத்தில் அனைவருக்கும் உடன்பாடு இருக்கும் என நான் கருதுகிறேன். எனது கூற்று அதிகபட்சமாக உண்மையாக இருக்கும் என நம்புகிறேன். எனவே நண்பர்களே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் உங்களின் முதல் தேடல் நிலம், வயல் மற்றும் வீடு ஆகா இருக்க வேண்டும்.. உங்களது இரண்டாவது விருப்பம் தங்கமாக இருக்கட்டும். தங்கம் என்றுமே ஜொலிக்கும் எனவே நீங்களும் தங்கம் போல் ஜொள்ளிப்பதற்கு தங்கத்தில் முதலீடு செய்யலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக